ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை பரிசோத ராஜ்நாத் சிங் பாராட்டு
1 min read
India’s first train-launched Agni Prime missile test success- Rajnath Singh praises
25.9.2025
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், நாட்டிலேயே முதன்முறையாக ரெயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் படைத்த இந்த நடுத்தர ரக ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
இந்திய ரெயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டது. அடுத்த தலைமுறையை சேர்ந்த இந்த ஏவுகணையில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.
ஒரு சில நாடுகளே கொண்டிருக்கும் இந்த தனித்தன்மை வாய்ந்த திறன்களை இந்தியாவும் பெற்றுள்ளது. இந்த பரிசோதனைக்காக (டி.ஆர்.டி.ஓ.வுக்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
ஒடிசாவின் சண்டிப்பூர் நகரில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. அது வெற்றியடைந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.