June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

1 min read

TASMAC case: Supreme Court issues barrage of questions to Enforcement Directorate

14/10/2025
தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், ‘டாஸ்மாக்’ நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

  • அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?
  • சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
  • சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?
  • மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
    இவ்வாறு கேள்வி எழுப்பியது.

டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.
ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.

அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *