June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

13 முதல் 18 வயதுடைய வீரதீர சாதனை பெண்களுக்கு விருது-ஆட்சியர் தகவல்

1 min read

Awards for brave women aged 13 to 18 – Ruler’s information

15.10.2025
தென்காசி மாவட்டத்தில் 13 வயதிற்குமேல் 18 வயதுக்குள் வீரதீர சாதனைகள் புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசியபெண் குழந்தைகள் தினத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும். அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும். பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண்குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு தகுதிகளின் அடிப்படையில் தேசியபெண் குழந்தைகள் தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும் ரூபாய்1 இலட்சத்திற்கான காசோலையும் தமிழக அரசால் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து 2025-2026 ஆம் ஆண்டும் மேற்படி விருது 13 வயதிற்குமேல் 18 வயதுக்குள் (31 டிசம்பர் நாளன்று) உள்ள பெண்குழந்தைகளில் கீழ்கண்ட வீரதீர செயல்கள் புரிந்த பெண்குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

வீரதீர செயல்கள்-பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பெண் குழந்தை திருமணம் ஒழிப்பு, வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்,

எனவே பெண் குழந்தைகள் தாங்கள் புரிந்த வீரதீர சாதனைகள் குறித்த விபரங்கள் அதற்கான ஆதாரங்களுடன் 20.08.2025 முதல் 29.11.2025-க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https//awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்திடவும். அசல் கருத்துருவினை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமூக நல ஆணையரகம். சென்னைக்கு அனுப்பி வைக்க ஏதுவாக மாவட்ட சமூக நல அலுவலகம், 140.5 B. ஸ்ரீசக்திநகர். தென்காசி என்ற முகவரிக்கு கிடைக்குமாறு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அனுப்பிடுமாலும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *