பலத்த மழை்: குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை
1 min read
Heavy rain: Bathing prohibited at Courtallam Main Waterfall and Five Waterfalls
தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை பெய்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைய டுத்து பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத் தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன் படி நேற்று காலை முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் வானம் இருண்டு வெளிச்சம் மிக மிகக் குறைந்து பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரி யாத அளவிற்கு வெளிச் சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங் கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டடன. சுமார் ஒரு மணிநேரம் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவியில் நேற்று மாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கபோலீசார் தடை விதித்தனர்.
பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தடைவிதிக் கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குறிப்பாக தென்காசி-திருநெல்வேலி சாலையில் குருநாத வைத்திய சாலையிலும், நகராட்சி அலுவலகம் முன்பாகவும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கும் அள விற்குதண்ணீர் பெருக்
கெடுத்து ஓடியது.
இந்நிலையில் இரவு மற்றும் நேற்று காலை நேரத்தில் மழை இல்லாததா அரேவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.