விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவோம்- எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
1 min read
We will raise questions about the shoe being thrown at Vijay – Edappadi Palaniswami interview
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தி.மு.க. அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவோம். கரூர் பெருந்துயரம் நிகழ்ந்த உடன், பதற்றத்துடன் அவசரமாக உடற்கூராய்வு நடைபெற்றது.
3 மேஜைகளில் 39 உடல்களை குறுகிய நேரத்தில உடற்கூராய்வு செய்தது எப்படி? இவ்வளவு வேகமாக எப்படி உடற்கூராய்வு செய்திருக்க முடியும்?
ஒருநபர் கமிஷனுக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு ஒரு நபர் ஆணையத்திற்கு உதவியாளர் கூட இல்லை.
அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்த பிறகு, ஒருநபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக, நேர்மையாக செயல்படும்.
கிட்னி முறைகேடு உறுதி செய்யப்பட்ட பிறகும், அரசு அவசரமாக செயல்படாதது ஏன்? கிட்னி முறைகேடு வழக்கில் ஏன் அக்கறை காட்டவில்லை.
கரூர் பெருந்துயர சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது. முதலமைச்சருக்கு உள்ள அதே உணர்வோடு தான் நானும் பேசுகிறேன்.
கிட்னி முறைகேடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. ஏன் இந்த பயம்? ஏன் பதற்றம்? முதலமைச்சர் முன்கூட்டியே பேசியது ஏன்?
சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பயம், பதற்றம். கரூர் துயரத்தின்போது தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்சுகள் வந்தது எப்படி?
கரூர் சம்பவத்தில் அரசியல் செய்வது யார்? கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் அரசியல் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.