June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பெயரால் வந்த குழப்பம்- இயக்குனர் பாரதி கண்ணனை வேதனைப்படுத்திய செய்தி

1 min read

Confusion over name – The news that pained director Bharathi Kannan

16.10.2025
இயக்குனர் பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது என தவறான தகவல் கசிந்தன. சில மீடியாக்களில் பாரதி கண்ணன் கைது என செய்தி வர, நான் அவனில்லை என்று விளக்கம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாரதிகண்ணன்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
‛‛நான் அருவா வேலு, கண்ணத்தாள், திருநெல்வேலி, பண்ணாரி அம்மன், கரகாட்டக்காரி உள்ளிட்ட 10க்கும் அதிகமான இயக்கி உள்ளேன். நேற்று பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போலீசார் இது குறித்து தகவல் செய்தி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் சிலர் பெயரை தவறாக புரிந்து கொண்டு என் போட்டோவுடன் செய்தி பிரசுரம் செய்து உள்ளனர். அது என் குடும்பத்தினருக்கு மன வருத்தம் கொடுத்துள்ளது. இதுவரை நான் வம்பு வழக்கில் சிக்கியது இல்லை. நான் வேறு, அந்த பாரதி கண்ணன் வேறு. அந்த வழக்கிற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. செய்தியை தவறாக வெளியிட்டவர்களும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உண்மையில் கைதான பாரதி கண்ணன் என்பவர் வேறு நபர். அவர் துணை நடிகர். அவரைப்பற்றிய செய்தி வருமாறு:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் வழக்குப்பதிவானது. இதில் சின்னத்திரை துணை நடிகர் பாரதிகண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய செய்தி வருமாறு:-
சென்னை கோயம்பேட்டில் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் லாட்ஜில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.. அப்போது அங்கிருந்த ரூமில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் பிடிபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். .
இந்த மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திர மாநில துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு மாணவியை எதற்காக விபச்சாரத்தில் தள்ளினீர்கள்? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பல பகீர் தகவல்கள் வெளியாகின.
அதாவது, மாணவியின் அப்பா திடீரென இறந்துவிட்டதால், அவரது அம்மா இன்னொருவரை 2வது திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டாராம். இதனால் தனிமையில் சிக்கிய மாணவி, எங்கே போவது? என்ன செய்வதென்றே தெரியாமல், கே.கே.நகரில் உள்ள, தன்னுடைய அம்மாவின் தோழி பூங்கொடி என்பவரின் வீட்டில் சென்று தங்கியிருக்கிறார்.
இந்த பூங்கொடி என்பவர், சினிமாவில் கிளப் டான்சர் ஆவார்.. மாணவியின் நெருக்கடி நிலைமையை அறிந்து, ஆசை வார்த்தை சொல்லி, விபச்சாரத்திலும் தள்ளியிருக்கிறார் பூங்கொடி..
ஆரம்பத்தில் இதற்கு மாணவி மறுத்துள்ளார்.. ஆனாலும், காஸ்ட்லி டிரஸ், ஐபோன், பணம் போன்ற பரிசு பொருட்களை தந்து, மாணவியை பணிய வைத்துள்ளார்.. இதற்கு மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யா என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
இதற்கு பிறகு மாணவி, முழு நேர விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, வசதிபடைத்த கஸ்டமர்களிடமிருந்து, லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்தாராம் பூங்கொடி.. இந்த வசதி படைத்த கஸ்டமர்களை பூங்கொடிக்கு அறிமுகம் செய்து வைத்தது சினிமா துணை நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்துள்ளது..
இதனையடுத்து பூங்கொடி, ஐஸ்வர்யா மற்றும் பாரதி கண்ணனை மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் படி மாணவியுடன் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன், திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான பாரதி கண்ணன், மகேந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *