June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ராணுவ பகுதியை உளவு பார்க்க மின்கம்பத்தில் கேமரா- 2 பேர் கைது

1 min read

Camera installed on electric pole to spy on army area – 2 arrested.

17.6.2026
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சாராய் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சிங் (40) இவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். பதிண்டா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம் மற்றும் ராணுவ தலைமையகம் உள்ளது. இதே விமானப்படை தளமும் உள்ளது.

இந்த பாதுகாப்பு மிகுந்த பகுதியில் ஒரு சாலை விபத்து நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸ் தங்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கேமராவை சோதனை செய்த போது அது சோலர் மின்சாரத்தால் இயங்கக்கூடியது. மேலும் அதில் இருந்த சிம்கார்டு கிடைத்தது அதன் பதிவுகளை பாகிஸ்தான் மற்றும் கனடாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அனுப்பியது தெரிய வந்தது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது அசோக் சிங் தான் அந்த கேமரா மற்றும்

சிம்கார்ட் வாங்கியது தெரியவந்தது. மேலும் அவரது கூட்டாளி அக்‌ஷ்தீப் சிங் (22) என்பவருடன் சேர்ந்து அந்த மின்கம்பத்தில் கேமராவை பொருத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். ராணுவ நடமாட்டம் குறித்த தகவலை பாகிஸ்தான் மற்றும் கனடாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தகவல்களை அனுப்பும் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு பதிண்டா பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *