June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் 65 கிலோ புகையிலை பொருட்கள், செல்போன் பறிமுதல்

1 min read

65 kg of tobacco products and a mobile phone seized in Thoothukudi

17.6.2026
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் லெவிஞ்சிபுரம் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் அந்த நபர் லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமணி (வயது (59) என்பதும், அவர் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்து, அவரிடமிருந்த 65 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *