June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் தாக்குதல் நடத்த சதி; 7 பயங்கரவாதிகள் கைது

1 min read

Plot to carry out an attack in Delhi; 7 terrorists arrested.

17.6.2026
தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி போலீஸ் உளவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார், டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அனிஸ் தியாகி, மோகித், தீபக் அக்ரொலா, ஆசிப், ஜதன், சபீர் ஆகிய 7 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதங்கள், பணம் உதவி வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் உளவு அமைப்பின் உத்தரவின் பெயரில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆயுதங்களுடன் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 7 பயங்கரவாதிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 பயங்கரவாதிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *