June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

நயினார் நாகேந்திரனுக்கு மு.க.ஸ்டாலின் திடீர் புகழாரம்

1 min read

MK Stalin’s sudden praise for Nayinar Nagendran

16.10.2025
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் முத்துசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக நயினார் நாகேந்திரன் குறித்து அவர் பேசும்போது,

”நயினார் நாகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும்போது கூட சிரித்துக்கொண்ட செல்வார். கட்சி பாகுபாடின்றி இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. யாரும் கோபம் வராத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவர் நயினார் நாகேந்திரன்.” என நயினாருக்கு மு.க.ஸ்டாலின் திடீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *