June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: வனவிலங்குகளை வேட்டையாடினால் நடவடிக்கை- வனத்துறை கடும் எச்சரிக்கை

1 min read

Tenkasi: Action will be taken against hunting wild animals – Forest Department warns

16.10.2025
தென்காசி வனக்கோட்டத்தில் துப்பாக்கி, மற்றும் நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தென்காசி மாவட்ட வன அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ென்காசி மாவட்டம், ஆலங்குளம், கடைய நல்லூர், புளியங்குடி, சிவகிரி வனச்சரக பகுதிகளில் தொடர்ந்து மான்களை துப்பாக்கிகள் மற்றும் நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்டுவருதாக தெரிய வருகிறது. இப்பகுதியில் துப்பாக்கி மற்றும் வேட்டை நாய்
களை வைத்து வேட்டை யாடுபவர்கள் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக புலனாய்வில் தெரிய வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் வேட்டை நாய்கள் வைத்து வன விலங்குகளை வேட்டையாடு பவர்கள் மீது வன உயிரின சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், துப்பாக்கி மற்றும் வேட்டை நாய்கள் பறிமுதல் செய்வதுடன்
சம்பந்தபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர்.

இதுகுறித்து தகவல் தருபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். இது குறித்து தகவல் தருபவர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும்.தகவல் தரவேண்டிய எண் 04633 233550

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *