June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம்- ஆட்சியர் தகவல்

1 min read

Special education loan camp in Tenkasi district – Collector information

16/10/2025
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இனணந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 16.10.2025 மற்றும் 2210.2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இனணந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 16.10.2025 அன்று S.வீராசாமி செட்டியார் பொறியியற் கல்லூரி, புளியங்குடியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் விவசாய கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. புளியங்குடியில் நடைபெறும் முகாமில் புளியங்குடி வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும், வாசுதேவநல்லூரில் நடைபெறும் முகாமில் வாசுதேவநல்லூர் வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும், 2210.2025 அன்று தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் தென்காசி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட விவரப்படி நடைபெறும் சிறப்பு கல்விக் கடன் முகாமில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியற் மருத்துவம். மருந்தியல், செவிலியர், தொழில்கல்வி, வேளாண்மை, பாலிடெக்னிக் சட்டம் போன்ற படிப்புக்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துகிறது. ரூ.7.5 லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை.

தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்: மாணவ,மாணவியர் மற்றும்

பெற்றோரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை நகல், மாணவமாணவியர் மற்றும் பெற்றோரின் பான் கார்டு அட்டை நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் வாக்காளர் அட்டை ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை ஏதேனும் ஒரு நகல், மாணவ/ மாணவியரின் இருப்பிட சான்று, வருமான சான்று நகல், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோரின் சேமிப்பு வங்கி கணக்கு முதல் பக்க நகல்(Joint Account) கல்லூரியிலிருந்து பெறப்பட்ட அசல் அனுமதி சான்று(Bonafide certificate) கல்லூரியிலிருந்து பெறப்பட்ட அசல் கல்லூரி கட்டண பட்டியல்(Fee Structure letter) மாணவ/மாணவியரின் கல்லூரி அடையாள அட்டை நகல், மாணவ/மாணவியர் முதல் பட்டதாரியெனின் அதற்கான சான்று, மாணவ/ மாணவியரின் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான அசல் ஆணை.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர் அனைவரும் கல்விக்கடன் மற்றும் வட்டி மானியத்திற்கு www.pmvidhyalaxmi.coin என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் வந்து கலந்துகொள்ளலாம். மேலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவ மாணவியரும் மேற்குறிப்பிட்ட தேவையான ஆவணங்களுடன் இம்முகாமில் பெற்றோருடன் கலந்துகொண்டு ஆலோசனைகளை பெற்று கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம் இம்முகாமில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை பெற்று, தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க தென்காசி மாவட்ட நிர்வாகம் மாற்று மாவட்ட முன்னோடி வங்கி மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04633 210820 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *