எண்ணெய் குளியலுக்கு உரிய நேரம்
1 min read
இந்த ஆண்டு தீபாவளி 20-.10.-2025 திங்கட்கிழமை வருகிறது. தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்பே எழுந்து குளித்து, விளக்கேற்றி வழிபடவேண்டும். அதிகாலையில் எழுந்து குளிப்பது தான் சிறப்பு. சூரிய ஊதயத்துக்கு முன்பு குளித்து சாமிகும்பிட்டு புத்தாடை அணிந்து விடவேண்டும். அதிகாலை 3-30 மணிமுதல் 4-30 மணிக்குள் குளிப்பது சாலச்சிறந்தது. அன்று சூரிய உதயத்துக்கு முன்பு பண்டம் படையலை வைத்து சாமிகும்பிடுவது நல்லது. அதை விடுத்தால் சாமிகும்பிட காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் வழிபடவேண்டும். அதை விடுத்தால் பகல் 1.14 முதல் 2.45 மணிவரைக்குள் வழிபடலாம்.