June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 min read

Bomb threat to Ramadoss and Anbumani’s homes

19.10.2025
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விழும்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரு வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வீடுகளில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *