June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் கட்டுமான பணியின்போது வீடு இடிந்தது; மூதாட்டி மீட்பு

1 min read

House collapsed during construction work in Sengottai; Elderly woman rescued

10/10/2025
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று வீடு கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *