சாபம்பவர் வடகரையில் தெருநாய் கடித்து தொழிலாளி பலி
1 min read
Worker dies after being bitten by stray dog in Vadakarai, Sabambavara
தென்காசி மாட்டத்தில் பல இடங்களில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பல ஊர்களில் நாய் கடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோர் பலர்.
இந்த நிலையில் தென்காசி அருகே நாய் கடித்து குதறியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனைக்கு செல்லாமல் அலட் சியமாக இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அருகே உள்ள
சாம்பவர் வடகரை வேலாயுதபு ரம்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் பன்றி மேய்க்கும் தொழிலாளி இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர். மாரியப்பன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்த போது இயற்கை உபாதை கழிப்பதற்
காக வெளியே சென்றார். அப்போது தெருவில் கூட்டமாக நாய்கள் வந்தன. அதில் இருந்த ஒரு நாய் திடீ ரென மாரியப்பனை கடித்து குதறியது. இதில் படுகாயம் டைந்த மாரியப்பன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே கைமருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரியப்ப னுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவரை உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் எதிரொலி யாக சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பிடித்து தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.