June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கடன் தொல்லை: மனைவி, மகன்களை அடித்துக் கொன்று தொழிலதிபர் தற்கொலை

1 min read

Debt problem: Businessman commits suicide after beating wife and sons to death

22.10.2025
சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சிரஞ்சீவி (56 வயது) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவி, நேற்று இரவு மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நீலாங்கரை போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *