பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தால் சேதம்-தற்காலிகமாக மூடப்பட்டது
1 min read
Flood damage at Old Courtallam Falls – Temporarily closed
24.10.2025
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கும் மேலாக அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பழைய குற்றாலம் அருவிப்பகுதி, தரைத்தளம் தடுப்புச் சுவர் சாலைகள், உடைமாற்றும் அறை கழிவறை என அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பழைய குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது மாறாக பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு அருவி திறக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.