June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக மாதாந்திர கூட்டம்

1 min read

oplus_131074

oplus_131074

Kadayam Thiruvalluvar Kazhagam Monthly Meeting

31.10.2025கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நேற்று (30.10.2025) வியாழக்கிழமை வடக்கு ரத வீதியில் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். குறள் சிந்தனைபற்றி க.சங்கரநாராயணன் பேசினார். க.கோபால் வரவேற்றார்.
“இளைஞர்களுக்கு வழிகாட்டும் வள்ளுவம்” என்ற தலைப்பில் மு.வேலு சிறப்புரை ஆற்றினார். “இயற்கை அறிந்து செயல்” என்ற தலைப்பில் அ.தூய அலெக்ஸ் பேசினார். “வாழ்வாங்கு வாழ்தல்” என்ற தலைப்பில் சே.அறிவுடைநம்பி பேசினார். செ.சோமசுந்தரம் நன்றி கூறினார்.
பேச்சாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு அளித்த திருவள்ளுவர் கழகச் செயலாளர் கல்யாணிசிவகாமிநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக மாணவிகள் நேகாஸ்ரீ, ஸ்ரீஜா,ஹர்ணி, பிரதீபா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் மாடசாமி, அம்பை திருவள்ளுவர் கழகத் தலைவர் நாறும்பூநாதன், அம்பை தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் இலட்சுமணன், புள்ளியியல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், சின்னசாமி, அந்தோணிராஜ், முருகன், நூலகர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ராதாகிருஷ்ணன் சிற்றுண்டி வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *