June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த பெண் கைது

1 min read

Woman arrested for bringing ganja to visit husband in prison in Nellai

2.11.2025
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜினி சாரல் (வயது 24). இவரது கணவர் வேல்சங்கர். இவரை ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சரோஜினி சாரல் தனது கணவரை பார்ப்பதற்காக சிறைக்கு வந்தார்.

அவரை காவலர்கள் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் ஒரு சிறிய பொட்டலத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் உள்ள தனது கணவர் வேல்சங்கருக்கு கொடுப்பதற்காக கஞ்சாவை வைத்திருந்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *