June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அங்கோலாவில் ஜனாதிபதி முர்முவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

1 min read

Red carpet welcome for President Murmu in Angola

9.11.2025
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார். இந்த இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அதிகாலை அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கோலாவின் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

அங்கோலா நாட்டின் 50-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் முர்மு பங்கேற்கிறார். அங்கோலா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.

அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11-ம் தேதி போட்ஸ்வானா செல்கிறார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் செல்லும் முர்மு போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார். அதன்பின், போட்ஸ்வானா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.

அங்கோலா , போட்ஸ்வானா பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி முர்மு வரும் 13-ம் தேதி நாடு திரும்புகிறார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *