June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-தென்காசி கலெக்டர் விளக்கம்

1 min read

Special serious revision of the voter list – Tenkasi Collector’s explanation

12.11.2025
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும். தென்காசி மாவட்டத்தில் 01.01.2026ஆம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர்கள், தென்காசி மாவட்டத்திற்குள் முன்னர் இருந்த வீடுகளிலிருந்து தற்போது முகவரி மாற்றம் செய்தவர்கள். தொழில் நிமித்தம் பிற மாவட்டங்களுக்கோ, பிற மாநிலங்களுக்கோ மற்றும் வெளிநாட்டிற்கோ இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்கள் தங்களது கணக்கீட்டுப் படிவங்களை பெற அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பெயர் மற்றும் தொலைபேசி விவரங்களை https://www.erolls.tn.gov.in/blo/6 5 கொள்ளலாம்.. அல்லது 04633-1950 வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். என்ற எண்ணில் தொலைபேசி

https://erolls.tn.gov.in/electoralsearch/. என்ற இணையதளம் மூலம் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக இருப்பின். விபரங்களை முடிந்த வரை தமிழில் அளித்து 2002- எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விபரங்களை அறிய முடியும்..

https://voters.eci.gov.in/இணையதளம் மூலம் பிற மாநிலங்களின் அளித்து 2002- எஸ்ஐஆர் வாக்காளர் வாக்காளர்களாக இருப்பின் விபரங்களை பட்டியலில் உள்ள வாக்காளர் விபரங்களை அறிய முடியும்.

https://erolls.tn.gov.in/Rollpdf/SIR 2002.aspx இணையதளம் மூலம் மாவட்டம், சட்டமன்ற தொகுதி மற்றும் பாகம் எண் ஆகிய விபரங்களை அளித்து 2002- எஸ்ஐஆர் ன் முழு வாக்காளர் பட்டியல் விபரங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் Online மூலமாகவும் https://voters.eci.gov.in/login என்ற இணையதளத்தில் கணக்கீட்டுப் படிவங்களை பதிவிறக்கம் செய்து விவரங்களைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.. மேற்கண்டவாறு பதிவிறக்கம் செய்யப்படும் கணக்கீட்டுப் படிவங்களில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு E-sign செய்வது அவசியம்..ஆன்லைன் மூலமாக கணக்கீட்டு படிவத்தை பதிவேற்றம் செய்வதும் அவசியம்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் voters..eci.gov.in என்ற இணைய தளத்திற்குள் சென்று Book a call with BLO என்ற வசதியைப் பயன்படுத்தியும் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பிஎல்ஓ விடம் பெறலாம் என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *