தென்காசியில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
Pensioners from all sectors protest in Tenkasi
தென்காசியில் திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் கால வாக்குறுதிகளான அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துதல், 80 வயது நிறைவடைந்த ஓய்வூதிபர்களுக்கு 20% கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதில் 10% 70 வயது நிறைவிலும் 10% 80 வயது நிறைவிலும் வழங்குதல், சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்ற ஓய்வூதிபர்கள், ஓய்வூதியம் எதுவுமே பெறப்படாத சிறப்பு கால முறை ஊதிய நிலையில் ஓய்வு பெற்ற சில துறை ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ7850/-வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி உண்மையான காசில்லா மருத்துவத்தை உறுதி செய்தல், கம்யூடேசன் தொகை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 11 ஆண்டுகளாக குறைத்திடுதல் போன்ற கோரிக்கைகளை தமிழக முதலமைச்சருக்கு வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அனைத்து வட்டக் கினை தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ன.
அதன்படி தென்காசி வட்டக் கிளையின் சார்பில் புதிய பேரூந்து நிலையம் முன்பு மாலை 4 மணி அளவில் வட்டக்கிளைத் தலைவர் கருப்பசாமி தலைமையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக்கிளை துணைத் தலைவர்கள் எஸ்.ஆறுமுகம், எஸ்.பாலசிங் பொன்ராஜ், பி.கண்ணன், இணைச் செயலாளர்கள் அந்தோணி ஜோதி பாண்டியன், கே.ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் திரு எம்.இசக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கி பேசினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பேராசிரியை ஆர்.சங்கரி துவக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வதியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.சுந்தாமூர்த்தி நாயனார், தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தென்காசி மண்டல தலைவர் எஸ்.அருணாசலம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ராமசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தென்காசி மாவட்டச் செயலாளர் வி.நாராயணன் நிறைவுரையாற்றினார். பொருளாளர் பி.அண்ணா துரை நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 25 பெண்கள் உட்பட திரளாக 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.