June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

1 min read

You can apply for the post of Child Support Center Supervisor in Tenkasi District.

19.11.2025
தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் மேற்பார்வை யாளர் பணியிடம் நியமனம் செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர். தகவல்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மிஷன் வத்சாலயா திட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு 1 மேற்பார்வையாளர் பணியிடம் முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.21000/-வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ கணினி அறிவியல் தகவல் தொழில் நுட்பம்/ சமூகம் சார்ந்த சமூகவியல் சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் மற்றும் கணிணியில் திறமை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 42 ஆண்டுக்குள் இருத்தல் வேண்டும். குழந்தைகள் உதவி மையத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்பணியாளர்களுக்கு வயது வரம்பு தளர்வு 52ஆண்டுக்குள் இருக்கலாம்.

இதற்கான விண்ணப்பபடிவத்தை மாவட்ட இணையதளத்தில் https//tenkasi.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர். மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, எண்.14. பெருமாள் கோவில் தெரு SPA Hall) செவன்த்டே பள்ளி அருகில் தென்காசி 627 811 தொலைபேசி எண்.04633-291125 முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள். கல்வி சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *