தென்காசியில் ஜாக்டோ – ஜியோ போராட்டம்
1 min read
JACTO-GEO protest in Tenkasi
19.11.2025
தென்காசியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக முறைப்ப டுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராடடம் நடந்தது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் இரா.சண்முகசுந்தரம், முருகேஷ், பாலசுப்பிரமணி யன்,பிச்சைக்கனி, ராஜேந்தி ரன், ஆரோக்கியராசு ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
அரசு ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், மாரிமுத்து, ஊரக வளர்ச்சித்துறை ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல் வேறு துறைகளைச் சார்ந்த ஜான், மணிகண்டன், சங்கரநாராய ணன், சேகர், ராஜ்குமார், திருப்பதி, கணபதிராமன், வேல்ராஜன், முத்துமாரி யப்பன் பிரகாஷ், மோகன்ராஜ்,, சதீஷ்குமார், பிரேமா, ராமமூர்த்தி, ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், ஐயப்பன், கிருபா சம்பத், செல்வகுமார், சாலமன், ரமேஷ், மாடக்கண்ணு தனலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டகுழு உறுப்பினர் வெங்கடேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சண்முகசுந்தரம் அனைவருக்கும் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது தொடர்ந்து நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மழையையும் பொருட்படுத் தாமல் குடைபிடித்தவாறு அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.