போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு- ஈரான் மறுப்பு
1 min read
Trump announces ceasefire reached – Iran denies it.
12.6.2026
அமெரிக்கா – ஈரான் போர் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. ஏப்ரல் 8-ந் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அமலானபோதும் நிரந்தர போர் நிறுத்தத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தி அருகே தங்கள் ராணுவ கண்காணிப்பு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறி அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மீண்டும் முன்னெடுத்தது.
கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல் நடந்து வந்தது. ஈரானும் பதிலுக்கு மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
நேற்று முன்தினம் இரவு ஈரான் மீது பாரிய தாக்குதல் ஒன்றை அமெரிக்கா நடத்தும் என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை கால்ட் ஆப் செய்து திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது:-
“ஈரான் அரசுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாபெரும் அமைதி உடன்படிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதற்கான ஆவணங்கள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன. இன்னும் சில நாட்களில், அநேகமாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் வைத்து இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகும்.
ஒப்பந்தம் கையெழுத்தான உடனே ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்திற்காக உடனடியாக திறக்கப்படும்.
மிக முக்கியமாக, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் எனவே அந்நாடு மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துவதாக தனது ட்ரூத் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.