June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூரில் வாலிபரை கொன்ற நண்பர் கைது

1 min read

Friend arrested for killing youth in Kadayanallur

24.11.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்த திவான் மைதீன் என்பவரது மகன் முஸம்மில் (வயது 22). பட்டதாரியான இவருக்கு மதீனாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த செய்யது அலி என்பவரது மகன் அபு என்ற அபூபக்கர் (வயது 22) என்பவர் நெருங்கிய நண்பர் ஆவார்.

நேற்று மதியம் இருவரும் வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசலில் ஜும்மா தொழு கையை முடித்துவிட்டு வீட் டிற்கு நடந்து சென்று கொண்டி ருந்தனர். அப்போது பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அபு தனது வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து முஸம்மில்லை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனும தித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

இது குறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி செ.அரவிந்த், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன், கடையநல் லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் கொலையான முஸம்மில் உறவினர்கள் திரண்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. இதனிடையே தப்பியோடிய அபுவை தனிப் படை போலீசார் மடக்கி பிடித்த னர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து அபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *