August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா மரணம்- பிரதம உள்ளிட்டோர் இரங்கல்

1 min read

Veteran Hindi actor Dharmendra passes away – Prime Minister condoles his death

24.11.2025
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெரிய வந்தது.

பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர்.

தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்,” நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றுள்ளதை குறிக்கிறது. பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

தர்மேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *