பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச பாலின விழிப்புணர்வு பேரணி
1 min read
International Gender Awareness Rally to End Violence Against Women
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச பாலின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் த
ஏ.கே. கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்,
தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான மாற்றத்திற்கான சர்வதேச தினத்தில் புதிய உணர்வுமுன்முயற்சி,4.0′ (25.11.2025 முதல் 23122025 வரை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச பாலின விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. மேலும் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள் நடத்தப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டும் அளவில் நடத்தப்படுகிறது.
தேசிய அளவிலான பாலின பாகுபாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தை மாநிலம் மாவட்டம்/வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி அளவில் பெண்கள் வழி நடத்தும் வளர்ச்சி வன்முறையற்ற ” பிரச்சாரத்தின் முக்கிய கருபொருளாக கொண்டு கீழ்காணும் 4 வார காலத்திற்கான கருத்துக்களில் இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடைபெற உள்ளது.
மேலும், இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முக்கியக் கருத்துக்களாக பெண்களின் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. பராமரிப்பு பணிகள், அங்கீகரித்தல், குறைத்தல் மற்றும் பகிர்தல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம். சம வாய்ப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகல் என்பது வன்முறை தடுப்பின் மூலமூச்சு. பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சி தான் சமத்துவமான சமூகத்திற்கான வழி எனவே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் “புதிய உணர்வு மாற்றத்திற்கான முன்முயற்சி .4.0′ என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர்
சீ. ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.