அம்பாசமுத்திரம் பகுதியில் கனமழைக்கு 6 வீடுகள் இடிந்தது
1 min read
6 houses collapsed due to heavy rain in Ambasamudram area
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெய்த கனமழையினால் ஒரே நாளில் 6 வீடுகள் இடிந்தது.
சேரன்மகாதேவி அருகே கூனியூரில் தொழிலாளியின் வீடு மழையால் இடிந்து சேதமானது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் நேற்று ஒரே நாளில் ஆறு வீடுகள் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது தொடர் மழையால் நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. மேலும் மழையால் பல்வேறு வீடுகள் இடிந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது அதன்படி சேரன்மகாதேவி அருகே கூனியூரில் கூலி வேலை பார்த்து வரும் சங்கர குமார் என்பவர் ஓட்டு வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் அவரது வீட்டில் ஈரம் பொங்கிய நிலையில் இரவு திடீரென வீட்டின் இருபுறமும் இடிந்து விழுந்தது அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் தொடர்ந்து தீயணைப்புத் துறை நிலை அலுவலர் சூசை மரியபாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சங்கரகுமார் வீட்டிற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் சங்கர குமார் வீட்டிற்குள் இருந்த பீரோ கட்டில் டிவி போன்ற பொருட்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றிக் கொடுத்தனர்
அதேபோல் அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீடும் நேற்று மழையால் இடிந்து சேதமானது குறிப்பாக சேரன்மகாதேவி தாலுகாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஆறு வீடுகளில் இடிந்து சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது எனவே வருவாய் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.