June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

வீ.கே. புதூரில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் நண்பருடன் கைது

1 min read

Electricity Board engineer arrested for accepting Rs. 7,000 bribe in V.K.Puttur

25.11.2025
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் விவசாயியிடம் இலவச மின் இணைப்புக்கு மீட்டர் வைக்க ரூபாய் 7000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் கழநீர்குளம் துரை ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா, கீழ வீராணம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் க.செல்வகணேஷ் (வயது30), என்பவர் அவரது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு 2020 ஆம் ஆண்டு மின் கம்பம் நட ரூ.24,000/-ம் பணம் செலுத்தி இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியிருந்ததாகவும், அந்த மின் இணைப்பு சம்மந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வீ.கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில் அலுவலகத்தில் இருந்து மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் செல்வகணேஷிடம் தொடர்பு கொண்டு அவரது விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் என்று கூறியதாகவும் அதன்பேரில் கடந்த 22.11.2025-ம் தேதி புகார்தாரர் வீ.கே. புதூர் மின்வாரிய பொறியாளர்.பிரேம் ஆனந்தை சந்தித்து கேட்டபோது நிலத்திற்கான பட்டா, ஈசி, மோட்டார் பில், டெஸ்ட் ரிப்போர்ட், நில ஆவணங்கள் அக்ரிமெனட் ஆகிய ஆவணங்கள் மற்றும் ரூபாய் ரூ.10,000/-த்துடன் பணத்துடன் வந்து மின்வாரிய பொறியாளர்.பிரேம் ஆனந்தை பார்க்க சொன்னதாகவும், அதன்பேரில் 24.11.2025-ம் தேதி சுமார் 12.45 மணியளவில் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்தை பார்த்து தனக்கு ரூபாய் 10,000/- பணம் கொடுக்க முடியாததால் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதாகவும் அப்போது பிரேம் ஆனந்த் ரூ.7,000/- பணம் கொடுத்தால்தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராக சொல்லிவிட்டதால், பணம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வீ.கே.புதூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் மீது 24.11.2025-ம் தேதி வழக்கு பதிவு செய்து ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் 7,000/-த்தை புகார்தாரரிடம் கொடுக்க அந்த பணத்துடன் இன்று 25.11.2025-ஆம் தேதி புகார்தாரர், வீ.கே.புதூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்தை சந்தித்தபோது மேற்படி பணத்தை தனது நண்பர் தெற்கு கழுநீர்குளம், சுடலை முத்து என்பவரதுமகன் துரை(வயது 43) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

அந்த லஞ்சப்பணத்தை துரை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் பிரேம் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் துரை ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோல் பொதுமக்களிடம் அரசாங்க ஊழியர்கள் லஞ்சமாக பணம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *