அயோத்தி ராமர் கோவிலில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi hoists the flag at Ayodhya Ram Temple
25.11.2025
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெற்றது.

கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி கொடியை ஏற்றி வைத்தார். இதனால் அயோத்தி விழா கோலம் பூண்டுள்ளது.
ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள சன்னதிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில்மோடி
பேசியதாவது:-
- 2047-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்
- நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்
- இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ராமர் கோயில் கட்டுமானத்தில் எந்த வகையிலும் உதவிய அனைத்து ராமர் பக்தர்களை நான் வாழ்த்துகிறேன்.
- பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்
- அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் காண்கிறது. முழு நாடும், உலகமும் ராமரில் மூழ்கியுள்ளது.
- 100 ஆண்டுகளின் காயங்களும் வலிகளும் இன்று குணமடைகின்றன. 500 ஆண்டுகால உறுதிமொழி நிறைவேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.