தென்காசி மாவட்டம்: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உதவி மைய எண்கள் அறிவிப்பு
1 min read
Tenkasi District: Voter List Urgent Correction Help Center Numbers Announced
தென்காசி மாவட்டத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது வாக்காளர்களிடமிருந்து நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் திரும்ப பெற்று பிஎல்ஓ ஆப் -ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் தங்கள் கைவசமுள்ள நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும்படியும் மற்றும் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறுவதற்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். கணக்கீட்டுப் படிவங்கள் வழங்காத நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என்ற விவரமும் இதன் மூலம் வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதுவரை கணக்கீட்டுப் படிவங்கள் பெறாத நபர்கள் கீழ்க்கண்ட உதவி மைய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வாக்காளர் அட்டை எண்ணைத் தெரிவித்து தங்கள் பகுதியின் பிஎல்ஓ விவரங்களைக் கேட்டுப் பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்-04633 – 210074, 04633 – 1950
தென்காசி சட்டமன்றத் தொகுதி-04633 – 222212
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி-04633 – 245666
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி-04633 – 270899, 9944096957
சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி- 04636 – 223030
வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி-04636 – 250223