தென்காசி நகராட்சியில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் பதவி ஏற்பு
1 min read
A disabled person takes office as a member in Tenkasi Municipality
26/11/2025
தென்காசி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தென்காசி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும் என்ற ஆணையின்படி தென்காசி நகராட்சியில்
எம்.வள்ளியம்மாள் நியமன நகர்மன்ற உறுப்பினராக நேற்று பதவி ஏற்றிக்கொண்டார்
இந்த நிகழ்வில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நகராட்சி பொறியாளர் கண்ணன் செயற்பொறியாளர் ஜெயப்பிரியா மேலாளர் ரத்தினம் உதவியாளர் கணேசன் இளநிலை உதவியாளர் செந்தில் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.