June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை கிரிவலப்பாதை அமைக்கும் பணியை முதல்அமைச்சர் தொடங்கி வைத்தார்

1 min read

Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Thoranamalai Giriwala Path.

27.11.2025
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களில் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில், மலையை சுற்றி கிரிவல பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? தென்காசி ஆலங்குளம் தொகுதியின் அப்போதைய அ.தி.மு.க. உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-
தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்திடம் போதிய நிதி வசதி இல்லாததால் உபயதாரர்களை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அடுத்த 3 மாதத்திற்குள் தோரணமலை கிரிவல பாதை பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் பதில் கூறினார்.
அதன்படி இன்று(27/11/2025) தோரணமலை கிரிவலப்பாதை அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனையொட்டி தோரணமலையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமார், தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன்ஆய்வாளர் சரவணன், செல் அலுவலர் கேசவராஜன், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துதலைவர் பொன்ஷீலா பரமசிவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து கோவிலுக்கு வடபுறம் புல்டோசர் கிரிவலப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *