June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகையர் அம்பிகா, ராதாவின் தாய் சரசம்மா மரணம்

1 min read

Actresses Ambika and Radha’s mother Sarasamma passes away

29.11.2025
நடிகையர் ராதா, அம்பிகா சகோதரிகளின் தாய் சரசம்மா நாயர், 87, உடல் நலக்குறைவால் கடந்த வியாழன் அன்று காலமானார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரசம்மா, காங்கிரஸ் கட்சி மகளிர் அணியில் தீவிரமாக பணியாற்றியவர். 2014 வரை கேரள மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமூக சேவை மற்றும் அரசியல் தளங்களில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர்.

கேரளாவில் வியாழன் அன்று அவர் மரணம் அடைந்த தகவலை, அம்பிகா சமூக வலைதளத்தில் அறிவித்தார். சரசம்மாவின் இறுதிச்சடங்கு வெள்ளி அன்று திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களின் சொந்த ஊரான கல்லாராவில் நடந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *