June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

புதுவையில் போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’-ரூ.500 கோடி மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்

1 min read

Fake drug factory ‘sealed’ in Puducherry – Rs. 500 crore worth of pills, equipment seized

30.11.2025
டெல்லியை தலைமையிடமாக கொண்டு ‘சன் பார்மசி’ என்ற பெயரில் மாத்திரை நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் ராஜாவுக்கு சொந்தமான ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலைக்கு ‘சீல் வைத்தனர். அங்கு ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவுக்கு உதவியாக இருந்த ராணா, மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் சொன்ன தகவலின்பேரில் திருபுவனைபாளையத்தில் செயல்பட்டு வந்த ‘லார்வன்’ மருந்து தொழிற்சாலையில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டு, 36 அறைகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நோய்களுக்கான போலி மாத்திரைகள், மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சோதனை நடத்தினர்.

கடந்த 2 நாட்களாக நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மாத்திரைகள், மருந்து உபகரணங்கள், மூலப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அத்தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விரைவில் புதுவை வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *