October 28, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே போலீசாரை வெட்ட முயன்ற இருவர் கைது.

1 min read

Two people arrested for trying to hack police officers near Alankulam.

5.12.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 27) என்பவருக்கும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொத்தை கிராமத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 28) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மகாலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இசக்கிபாண்டி தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு மகாலட்சுமியை அழைத்ததற்கு வர முடியாது என கூறியதால் நேற்று முன்தினம் நெட்டூரில் உள்ள மகாலட்சுமி வீட்டிற்கு தனது நண்பரான பேச்சிதுரை
(வயது19) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நெட்டூர் கிராமத்திற்கு சென்று மகாலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது அதனை அறிந்த பொதுமக்கள் நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் மற்றும் பெண் போலீஸ் ஒருவரும் சேர்ந்து பிரச்சனையை தீர்க்க செல்லும் பொழுது போலீஸ் ஏட்டு முருகனை இசக்கி பாண்டி சரமாரியாக வெட்டுவதற்கு கையில் அரிவாளுடன் துரத்தி சென்றார்.இதில் லேசான காயத்துடன் போலீஸ் முருகன் தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் அறிந்து ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இசக்கிபாண்டி தனது நண்பருடன் தலைமறைவான நிலையில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி பாண்டியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை அருகே பதுங்கி இருப்பதாகவும் பின்பு நெல்லையிலிருந்து ஆலங்குளம் நோக்கி நல்லூர் விலக்கு பகுதியில் இசக்கிபாண்டி தனது நண்பருடன் பைக்கில் வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மறைந்திருந்து இசக்கி பாண்டி மற்றும் அவரது நண்பர் பேச்சிதுரை ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இசக்கிபாண்டி போலீஸை துரத்தி சென்று அரிவாளால் வெட்டும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *