June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி அருகே மாற்றுத் திறனாளி வெட்டிக் கொலை

1 min read

Disabled person hacked to death near Puliyangudi

6.12.2025
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளிகளை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தவர்கள் அதனை தடுக்க முயன்ற அவரது மனைவியையும் வெட்டி விட்டுதப்பி ஓடினர்.அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமம் கீழ பிள்ளையார் கோவில் தெருவைசேர்ந்த சங்கரலிங்கம்(வயது 48) மாற்றுத்தினாளியான இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக நிலபிரச்சினை இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் புளியங்குடி காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சங்கரலிங்கம் (வயது 48) இவரது மனைவி சுப்பு தாய் (வயது 40) இருவரும் கரிவலம்வந்தநல்லூர் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் இரவில் வீட்டிற்கு திரும்பும் வழியில் சூடுகாட்டு விலக்கு பகுதியில் உள்ள பாலத்தில் மறைந்திருந்த அவரது உறவினர்கள் ராமர் செல்லையா பேச்சிமுத்து சக்திவேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் -மனைவியை வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படும் நிலையில் கணவர் சங்கரலிங்கம் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து பரிதாபமாக உயிழந்தார்.

இதனை அடுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி சுப்பு தாயின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சமபவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்புத்தாயை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்த நிலையில் அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பலியான சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன் சங்கரன்கோவில் டிஎஸ்பி செங்குட்டுவன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு கொலை சம்பவம் குறித்து ஆய்வு செய்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கொலை குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை புளியங்குடி காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். நிலபிரச்சனை காரணமாக மாற்றுத்தினாளி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *