June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் ரவுடியை பிடிக்க மலையில் ஏறிய போலீசார் தவிப்பு

1 min read

The escaped rowdy from Thrissur hides in the Kadayam hills.

6/12/2025

தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாலமுருகன் 

இவர் மீது நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் திருச்சூர் சிறை வாசலில்  போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் கடையம் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை பிடிக்க சென்றபோது போலீஸாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல  ரவுடி பாலமுருகன் (வயது 30). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையில் 80 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை உள்ளன.  கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி திருச்சூர் சிறையில் கைதியாக இருந்த நிலையில்,. கடந்த மாதம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கு ஒன்றில் ,  தமிழ்நாடு காவல் துறையினர்  திருச்சூர் சென்று, அவரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் ‌திருச்சூர் அழைத்துச் சென்றனர். 

அங்கு திருச்சூர் சிறைச்சாலை முன்பு காவல் துறையினரை  தாக்கி விட்டு தலை மறைவானார். பாலமுருகன்.‌ கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்து வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கடையத்திற்கு வந்தார். 

 இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்  அவரை பிடிக்க முற்பட்டபோது ராமநதி அணை அருகே சுமார் 1000 அடி உயரம் உள்ள மலை குன்றின் மேல் ஏறினார். ரவுடியை பிடிக்க மலை பகுதியில் ஏறிய 5 காவலர்கள்  மலையில் செங்குத்தான பகுதியில் மாட்டிக் கொண்டனர். மழை, இருள்  ஆகியவற்றின் காரணமாக அவர்களால் மேலே ஏறவும் முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க சுமார் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.‌

இப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மலையில் ஏறி ரவுடியை பிடிப்பது சவாலாக உள்ளது.

 இந்நிலையில் 36 மணி நேரம் கடந்து காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உணவு, குடிநீர் இன்றி மழை நேரத்தில் மலைப்பகுதியில் ரவுடி பாலமுருகன் தங்கி இருப்பது சாத்தியமா? அல்லது வேறு எங்காவது அவர் தப்பி சென்று விட்டாரா? என்று எண்ணம்  காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் போலீசார் தொடர்ந்து ரவுடி பாலமுருகனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

One attachment  •  Scanned by GmailAdd to Drive

ReplyReply allForward

Add reaction

Compose:New MessageMinimizePop-outClose

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *