மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான ரெயில் நிலையங்கள் எத்தனை ? – ஐகோர்ட்டு கேள்வி
1 min read
How many railway stations are accessible to the differently-abled? – High Court question
8.6.2026
ரெயில் நிலையங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எத்தனை ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.