June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம்: தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

1 min read

Kadayam: Southern Packaging Traders Welfare Association Consultative Meeting

7.12.2025
தென்காசி மாவட்டம்,கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டியில், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை தாங்கினார் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் நவாஸ் கான், துணைத்தலைவர் பழக்கடை சுலைமான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பாக்யராஜ் அனைவரையும் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஹெர்லின் ஜெபராஜ் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் மாதாபுரம் முதல் ஆம்பூர் வரையிலான சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும். முதலியார்பட்டி மற்றும் இந்திரா நகர் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.
வியாபாரிகள் அனைவரும் வியாபாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மின்னல் காதர், பிச்சையா, இப்ராஹிம், சேட், தங்கையா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *