June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் அரசு வழக்கறிஞரை கொன்றவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

1 min read

The killer of a government lawyer in Tenkasi committed suicide by jumping in front of a train.

12.12.2024
தென்காசியில் கடந்த 3 தேதி பட்டப் பகலில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியைஅவரது அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர் சரமாரி வெட்டிக் கொலை செய்தார்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலே இறந்ததாக தகவல் தெரிவித்தனர்

அதன் பின்னர் இவரை கொலை செய்தவர் கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி யின் எதிர் வீட்டு சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பது தெரிந்ததை தொடர்ந்து அவரை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரையும் மதுரையில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

சிவசுப்பிரமணியன் மட்டும் எங்கே சென்றார் என்பது தெரியாததால் அவர் கையில் செல்போன் கொண்டு செல்லாததால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது செலவு செய்வதற்கு சிவசுப்பிரமணியன் கையில் பணம் இல்லாததால் எப்படியாவது ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பார் அதன் மூலம் அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம் என போலீசார் தீவிரமாக அவரை கண்காணித்தது மற்றும் அவருடைய உறவினர் யாருக்காவது தொலைபேசியில் பேசுவார் என கண்காணித்து வந்த நிலையில் கடந்த 4 தேதி நாமக்கல் அருகே ரயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயிலில் அடிபட்டு கண்டெடுக்கப்பட்டது.அதன் பின்னர் நாமக்கல் மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்ற அடிப்படையில் வைக்கப்பட்டது

அதன் பின்னர் தனிப்படையினர் நாமக்கல் சென்று விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தென்காசியில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியன் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது சிவசுப்பிரமணியனை போலீசார் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினால்தான் இதற்கு விடை கிடைக்கும் என்ற நிலையில் கொலை குற்றவாளி சிவசுப்பிரமணியன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஏன் கொலை செய்யப்பட்டார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை.

முத்துக்குமாரசாமி கொலை செய்யப்பட்ட போது அந்த ஊரே பெரும் சோகத்தில் காணப்பட்ட நிலையில் அவரை கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்து விடுவார்கள் அவர்களுக்குள் என்ன பிரச்சனை எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்கிற விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று அனைவரும் நினைத்த நேரத்தில் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டதால் முத்துக்குமாரசாமியின் கொலைக்கான காரணம் கிடைக்காமல் போய்விட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *