June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

1 min read

Christmas celebration at Avudaiyanur St. Arulappar Higher Secondary School

21.12.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள
ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு 2026 விழா கொண்டாடப்பட்டது.

ஆவுடையானூரில் அமைந்துள்ள புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி தந்தை அருட்திரு அந்தோனி அ குரூஸ் தலைமை வகித்தார். தென்னிந்திய திருச்சபை புலவனூர் சேகரத் தலைவர் அருட்திரு நிக்சன், தோரணமலை முருகன் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஜீவா, தகண்ணன் மோகன், ரஹ்மானியாபுரம் ஜமாத் தலைவர் செய்யது முகமது ஆசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அன்பு சமத்துவம் சமூக நல்லிணக்கம் வலியுறுத்தி பேசினர்.

இந்த விழாவில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு நாடகம் மற்றும் பல்வேறு கிறிஸ்துமஸ் விழாவையொட்டிய நடன நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்ச்சி நடைபெற்றன. ஆசிரியை சாந்தி சகாய ஜோதி வரவேற்றார். கேத்தரின் கிரிஸ்டில்டா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை அக்சிலியா மேரி நன்றி கூறினார்.

கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப், உதவி தலைமை ஆசிரியர்கள் சகாயராணி, சாந்தி, என் எஸ் எஸ் அலுவலர் தங்கதுரை, ஜானி, ஜே ஆர் சி அலுவலர் சகாய ஜோதி, ஸ்கவுட் அலுவலர் ஜஸ்டின் உள்ளிட்ட ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *