தென்காசி மாவட்டத்தில் 28-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
1 min read
Polio vaccination camp in Tenkasi district on the 28th.
20/6/2026
இந்தியாவில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் செயல்படுத்துவதன் காரணமாக இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து போலியோ நோய் தாக்கம் இல்லாமல் உள்ளது.
இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஒரே தவணையாக (28.06.2026) ஞாயிற்றுக்கிழமை சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 87357 குழந்தைகள் பயனடைவார்கள்.
அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும், செங்கோட்டை, தென்காசி மற்றும் சங்கரன் கோவில் இரயில் நிலையங்களிலும் தென்காசி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், புளியங்குடி, கடையநல்லூர், திருவேங்கடம், கடையம். செங்கோட்டை சங்கரன்கோவில், ஆலங்குளம். பாவூர்சத்திரம், சுரண்டை பேருந்து நிலையங்களிலும், செங்கல்சூளை, கரும்பு காடுகள், அணைகட்டு பகுதி, சங்கரநயினார் கோவில் மற்றும் குற்றால அருவிகள் போன்ற பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலமாக மொத்தம் 869 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மையங்களில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 87357 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 28.062026 அன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 7 நாட்களும் பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இம்முகாமிலும் அவர்களுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இம்மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த 383 பணியாளர்களும், சத்துணவுப் பணியாளர்கள் 1243, தன்னார்வளர்கள் 1850 என மொத்தம் 3476 பணியாளர்கள் இம்முகாமில் பணியாற்ற உள்ளனர். இது தவிர இதர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களின் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்புடன் முகாம்கள் நடைபெற உள்ளது.
ஆகவே, பொதுமக்கள். தாய்மார்கள் அனைவரும் தங்களுடைய 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அருகில் ள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்துச் சென்று தங்களுடைய குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளுமாறும், போலியோ இல்லாத உலகம் படைப்பதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.