தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்
1 min read
Man attempts to set fire to Tenkasi Collector’s office
23.12.2025
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா. இவர் தனது மகன் ரமேஷ் என்பவருடன் வந்தார். அப்போது திடீரென சுப்பையா தான் கொண்டுவந்திருந்த பாட்டிலில் இருந்த டீசலை தலையில் ஊற்றி தீககுளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவரது மகன் ரமேஷ் கூறுகையில், “நான் ஒரு நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி பொக்லைன் எந்திரத்தை வாங்கினேன். அதனை தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் வாட கைக்கு விட்டேன். 9 மாத காலமாகியும் இதுவரை வாடகை தரவில்லை.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தீக்குளிக்கு முயன்ற சுப்பையாவை மீட்ட போலீசார் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.