August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊத்துமலையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் உள்பட இருவர் கைது

1 min read

Two people, including the landowner, arrested for illegally erecting an electric fence in Uthumalai

23.12.2025

தென்காசி வனக் கோட்டத்தின் ஆலங்குளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக மின்சாரம் இணைக்கப்பட்ட வேலி மற்றும் வனவிலங்கு பிடிக்கும் வலைகள் அமைக்கப் பட்டிருந்தது

இதுதொடர்பாக கடந்த 20ம் தேதி வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்பே ரில் இருவர் கைதுசெய்யப் பட்டு நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு பாது காப்புச் சட்டம், 1972 வனவிலங்குகளுக்கு உயிரிழப்பு அல்லது ச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயலும் தீவிரவேட்டை குற்றமாக கருத படுகிறது வனவிலங்குகளை தடுக்கும் அல்லது பிடிக்கும் நோக்கில் சட்டவிரோதமாக மின்சாரம் செலுத்துவது கடுமையான வனவிலங்கு குற்றமாகும். இதற்கான தண்டனையாக அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை மற் நும் அபராதம் விதிக்கப்ப டும் இவ்வழக்கில், சட்ட விரோத மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த நில உரிமையாளரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏனெனில் நிலத்தில் நடை பெரும் சட்டவிரோத செயல்களுக்குநில உரிமை யாளருக்கும் பொறுப்பு உண்டு இச்சட்டவிரோத செயலுக்குப் பயன்படுத் தப்பட்ட மின்வாரிய இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாவிகளுக்கும் மற்றும் நில உரிமையாளர்களுக்கும்.
விவசாய நிலங்களைச் சுற்றி சட்டவிரோத மின்சாரம் பயன்படுத்தி வேலி அமைக்கக் கூடாது என்று வனத்துறை கடும் எச்ச ரிக்கை விடுக்கிறது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எந்தத்தளர்வும் இன்றி கடுமை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சட்டவிரோத மின்சார வேலி அல்லது வனவிலங்கு பிடிக்கும் நடவடிக்கைகள் குறித்து அருகிலுள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொள்கிறது.
மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550 சிவகிரி 84636 298523 9788393242 புளியங்குடி 04636 235853. 9159955369, கடையநல்லூர் 04633270344 குற்றாலம் 04633 298190 9842085519, 04633 233660, 9786932520, ஆலங்குளம் 04633859455 என்று தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித் துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *