June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மாநில கபடி போட்டியில் மாதாபட்டணம் ச.ச.வி பள்ளி முதலிடம்

1 min read


Mathapatnam SSC School tops the state kabaddi competition

23.12.2025
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சற்குண சத்திய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தனர்.

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாநில அளவிலான 66 வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டி திருச்சி தொட்டியம் கொங்கு நாடு பொறியல் கல்லுரியில் நடைபெற்றது. அதில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மொத்தம் 39 மாவட்ட அணிகள் கலந்து கொண்டன.அதில் மாதா பட்டணம் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டு மாநில அளவில் கபடிபோட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவியரை பள்ளியின் தாளாளர் டாக்டர் சி.எஸ். ரெக்ஸ் சற்குணம், பள்ளியின் நிர்வாக செயலர் அருட்தந்தை எஸ்.ஏ‌.அந்தோணிசாமி அடிகளார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்தசிபியா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர், உடற்கல்வி இயக்குனர் ராஜலட்சுமி, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மகேஷ், சேர்மராஜா , பள்ளியின்ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவியர், அலுவலக பணியாளர்கள், அணியின் பயிற்சியாளர் சிவா ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு நினைவு கோப்பையும் , பதக்கமும் வழங்கி சிறப்பித்தார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *