June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளியில்தேசிய கணித தினம் கொண்டாட்டம்

1 min read

National Mathematics Day Celebration at Avudaiyanur St. Arulappar School

23.12.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள
ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் இந்திய தேசத்தின் மிகச்சிறந்த கணிதவியல் அறிஞராக உலகளவில் புகழ்பெற்ற சீனிவாச இராமானுஜரின் பிறந்த தின விழா தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டது.
ராமானுஜரின் சிறப்புகளான எண் கோட்பாடு, தொடர்கள் முடிவிலி போன்ற துறைகளில் அபார பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கணிதப் போட்டிகள், வினாடி வினா, ராமானுஜன் வாழ்க்கை குறித்த உரைகள் நடத்தப்பட்டன. இதில் கணித மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியின் நிர்வாகி அருட்திரு அந்தோனி அ குரூஸ் ஆலோசனைப்படி நடைபெற்ற இவ்விழாவில், உதவி தலைமை ஆசிரியர் சகாய ராணி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணித ஆசிரியர்கள் ஜானி, லிகோரி, மேரி ஜனா, சக்தி சேர்மக்கனி செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *