தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
People’s Grievance Redressal Day meeting in Tenkasi
23.12.2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தஏ.கே.கமல்கிஷோர்0மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 646 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் தவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 646 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பண்ணைத்தொழில் அமைப்பது குறித்து 20 நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற 23 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். கால்நடை பராமரிப்புத்துறை மண்ட இணை இயக்குநர் டாக்டர் ஆ.கோயில்ராஜா தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.